விராட் கோலி அவராவே போவார்னு 48 மணி நேரம் காத்திருந்த தேர்வுக்குழு- கேப்டன்சி நீக்கப் பின்னணி!

விராட் கோலி அவராவே போவார்னு 48 மணி நேரம் காத்திருந்த தேர்வுக்குழு- கேப்டன்சி நீக்கப் பின்னணி!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு 2023 உலகக்கோப்பை வரை ரோகித் சர்மாவிடம் கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோலி தானாகவே ஒருநாள் கேப்டன்சியை துறப்பார் என்று எதிர்பார்த்ததாகவும் அவர் செய்யவில்லை என்பதால் நிக்க வேண்டி வந்ததாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு 2023 உலகக்கோப்பை வரை ரோகித் சர்மாவிடம் கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோலி தானாகவே ஒருநாள் கேப்டன்சியை துறப்பார் என்று எதிர்பார்த்ததாகவும் அவர் செய்யவில்லை என்பதால் நிக்க வேண்டி வந்ததாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீரர்களுக்கும் கோலிக்குமான தொடர்பு படுத்தல்களில் விரிசல் இருந்ததாக முன்பு ஒருமுறை பிடிஐ ரிப்போர்ட் ஒன்று தெரிவித்தது. அதாவது தோனி கேப்டனாக இருந்த போது அவரது அறை 24 மணி நேரமும் வீரர்களுக்காக திறந்திருக்கும், ஆனால் கோலியை அணுக முடியாது, களத்தில் இருக்கும்வரைதான் அவரிடம் பேசலாம் களத்தை விட்டு அகன்றால் கோலியைப் பிடிப்பது கடினம் என்று பிடிஐ ரிப்போர்ட் முன்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் டி20 கேப்டன்சியிலிருந்து தானாகவே இறங்கிய விராட் கோலி, முடிந்தால் என்னை ஒருநாள் கேப்டன்சியிலிருந்து தூக்கிப் பாருங்கள் என்று சவால் விடுத்தது போல் அதிலிருந்து மட்டும் விலகவில்லை, இதனால் அவராகவே விலகுவார் என்று காத்திருந்ததாகவும் அதாவது 48 மணி நேரம் அவருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் ஆனால் அவர் மசியவில்லை என்பதால் நீக்கப்பட்டதாகவும் இப்போது கூறப்படுகிறது.

அனில் கும்ப்ளே மீது நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக புகார் அனுப்பி அனுப்பி அவரை வெளியே அனுப்பியது முதல் அஸ்வினை உட்கார வைத்தது வரை பல்வேறு அணித்தேர்வு குளறுபடிகளை கோலி செய்தது உண்மைதான். தன் இஷ்டத்துக்கு இந்திய அணியை தன் சொந்த அணி போல் பாவித்தார். குல்தீப் யாதவ் எனும் டெஸ்ட் பவுலரையே நாம் இதனால் இழந்தோம், எப்படி அஸ்வினில் ஒரு டி20, ஒருநாள் பவுலரை இழந்தோமோ அதே போல் குல்தீப் யாதவ்வை குரூம் பண்ணிக் கொண்டு வந்தவர் அனில் கும்ப்ளே.

ராமச்சந்திர குஹா உச்ச நீதிமன்றம் அமைத்த இடைக்கால பிசிசிஐ கமிட்டியில் இருந்த போது, ‘இன்னும் சில நாட்களில் அணித் தேர்வுக்குழுவையே கோலிதான் தேர்வு செய்வார் யார் வர்ணனை செய்ய வேண்டும் என்பதையும் அவரே முடிவு செய்வார்’ என்றும் கிண்டலாக எழுதினார். நடந்தது என்னவோ அதுதான்.

இந்திய அணியின் ஓய்வறையில் வீரர்கள் மத்தியில் கோலி பாப்புலர் இல்லை என்பதுதான் சொல்லப்படாத ரகசியம் என்கின்றன சில ஊடகங்கள். எனவே கோலி கேப்டன்சி பறிபோனதற்குப் பின்னணியில் நிறைய விஷயங்கள் உள்ளன, சாஸ்திரி இருக்கும் போதே இது விவாதிக்கப்பட்டிருக்கலாம், சாஸ்திரி அணியின் ஒருமை குலையும் அதனால் இப்போது வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது, சாஸ்திரி போன பிறகு தற்போது கோலியின் கேப்டன்சியும் பறிபோயுள்ளது. கோலி இனி பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் நல்லது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.