தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் களனிகம மற்றும் மில்லனியாவிற்கு இடையில் இன்று இடம்பெற்ற கார் விபத்தில் ஆண் ஒருவரும் அவரது வயது குறைந்த மகளும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
மில்லனியாவில் 18 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் பாதுகாப்பு வேலியில் கார் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஆண் மற்றும் அவரது 04 வயது மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)