360 பால் மா பக்கட்டுக்களை கொள்வனவு செய்ய நீண்ட வரிசையில் நின்ற வாடிக்கையாளர்கள்!

360 பால் மா பக்கட்டுக்களை கொள்வனவு செய்ய நீண்ட வரிசையில் நின்ற வாடிக்கையாளர்கள்!

சந்தையில் பால் மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நுவரெலியாவில் உள்ள அரச நிறுவனமொன்றின் கட்டிடத்தில் உள்ள உள்ளூர் பால் மா விற்பனை நிலையத்திற்கு முன்பாக கடந்த இன்று(14) பால் மா பொதியை கொள்வனவு செய்ய நுகர்வோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அம்பேவெல பால் மா தொழிற்சாலையில் பால் மா தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட 360 பால் மா பாக்கெட்டுகளை கொள்வனவு செய்ய நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரம் நுகர்வோர் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தலா ஒரு
பால் மா பாக்கெட்டினை வழங்குவதாக பால் மா கடை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

பால் மா பாக்கெட்டுகளை கொள்வனவு செய்ய வரிசையில் காத்திருந்த சில வாடிக்கையாளர்களுக்கு பால் மா பக்கட் கிடைக்காது சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.