33 ஆயிரம் லீட்டர் டீசலுடன் குடைசாய்ந்து விபத்துக்குள்ளான பெற்றோலிய கூட்டுத்தாபன ஊர்தி!

33 ஆயிரம் லீட்டர் டீசலுடன் குடைசாய்ந்து விபத்துக்குள்ளான பெற்றோலிய கூட்டுத்தாபன ஊர்தி!


சபுகஸ்கந்தவில் இருந்து கொட்டகலை பெற்றோலிய கூட்டுத்தாபன எண்ணெய் களஞ்சியத்துக்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற தாங்கி ஊர்தியொன்று கினிகத்தேனை நகரில் உள்ள ஆடை தொழிற்சாலைக்கு அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கினிகத்தேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.


இன்று (13) பிற்பகல் 5.00 மணியளவில் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பகுதியில் இந்த தாங்கி ஊர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


தாங்கி ஊர்தி கவிழ்ந்ததில் முன்பக்க ஆசனத்தில் சிக்கியிருந்த அதன் சாரதி மீட்கப்பட்டு கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


விபத்தின் போது தாங்கியில் 33,000 லீற்றர் டீசல் இருந்ததாகவும், தாங்கியிலிருந்து சிறிதளவு கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


பிரதான வீதியின் ஒரு வழியில் குறுக்காக கவிழ்ந்த தாங்கி ஊர்தியிலிருந்து எரிபொருளை அகற்றி தாங்கி ஊர்தியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.