31 வயதான திருமணமாகாத பெண் சுட்டுக்கொலை!

31 வயதான திருமணமாகாத பெண் சுட்டுக்கொலை!


வவுனியா - நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பெண்ணொருவர் துப்பாக்கி சூட்டுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.


குறித்த சம்பவம் இன்று (15) காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


31 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவர் தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரது வீட்டிற்கு அருகில் வைத்து நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.


சூட்டு காயங்களிற்குள்ளான குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


சம்பவத்தில் பாலசுப்ரமணியம் சத்தியகலா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதி செய்தனர்.


இந்த சம்வத்துடன் தொடர்புடைய திருமணமான ஒருவர் என்பதும், ஏற்கனவே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையானவர் என்பது தெரியவந்துள்ளது.


மேலும் தன்னை திருமணம் செய்யுமாறு குறித்த யுவதியை வற்புறுத்தி வந்த நிலையில், யுவதி பொலிஸ் முறைப்பாடு செய்தமையால் கோபமடைந்து சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேநேரம், பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபரை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.