ஒமிக்ரோன் புதிய கொரோனா மாறுபாடு இப்போது உலகளவில் ஐந்து மக்கள்தொகை கொண்ட கண்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதம் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய (01) நிலவரப்படி பிரேசில், தென் அமெரிக்கா மற்றும் நைஜீரியா, நோர்வே, அயர்லாந்து மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் ஒமிக்ரோன் தொற்று அடையாளம் காணப்பட்டிருந்தது.
அடையாளம் காணப்பட்ட அனைத்து பாதிக்கப்பட்ட நபர்களும் ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்த பின்னர் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (யாழ் நியூஸ்)