முஸ்லிம் கட்சிகளில் இருந்து, நாட்டில் நிலவும் பல்வேறுபட்ட குழப்பமான சந்தர்ப்பங்களை பயன்படுத்தி, மக்களிடம் மொட்டு ஹராம் ஹலால் எனப் பேசி பாரளுமன்றம் சொன்ற முஸ்லிம் கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களில் சிலர், 20 ஆம் திருத்தற்கு ஆதரவு அளித்து, பின்பு வரவு செலவு திட்டத்திற்கும் ஆதரவளித்தனர்.
இந்நிலையில் பல சந்தர்பங்களில் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர், தமக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என, 20 ஆம் திருத்த சட்ட மூலத்தின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை தாம் எதிர் பார்த்திருப்பதாகவும், அமைச்சுப் பதவிக்கான தமது ஏக்கத்தை வெளியிட்டிருந்தார்.
இவ்வாறு இவர்கள் தமக்கு பாரளுமன்ற அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கும்
உத்தேசம் அரசுக்கு இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அறிவித்துள்ளார். இதனால் இவர்களின் அமைச்சுப் பதவியின் கனவு கானல் நீராகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று 7 ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவை இணைப் பேச்சாளரான ரமேஷ் பத்திரன 20 ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவவழித்த முஸ்லிம் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுமா ? என வினவப்பட் கேள்விக்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
(பேருவளை ஹில்மி)