1998 என்ற இலக்குத்துக்கு அழைத்தால் ரூ. 1998 பெறுமதியான நிவாரண பொதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

1998 என்ற இலக்குத்துக்கு அழைத்தால் ரூ. 1998 பெறுமதியான நிவாரண பொதி!


எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக சதொச நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட விசேட நிவாரணப் பொதி வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.


“சந்தையில் பொதுவான சில்லறை விற்பனை நிலையங்கள் இரண்டில் கணக்கெடுத்தபோது ரூபா 2,751 மற்றும் ரூபா 2,489 இருக்கக்கூடிய பொதிகளை சதொச ஊடாக நாம் அதனை ரூபா 1,998 க்கு வழங்குகிறோம். இந்த பொருட்களை வீடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் இந்த பொருட்கள் அனைவருக்கும் சதொசவில் கிடைக்கவில்லை என்ற கவலையை நீக்க முடியும்" என அமைச்சர் கூறினார்.


பொதுமக்கள் இந்த நிவாரணப் பொதியை 1998 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் ஆர்டர் செய்யலாம். மேலும் இதன் விநியோகத்தை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.


அல்லது 0115 201 998 என்ற வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் உரிய நிவாரணப் பொதிகளை ஆர்டர் செய்ய முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.


மேலும் இந்த சிறப்பு நிவாரணப் பொதியில் 10 கிலோ சம்பா அரிசி, 2 கிலோ பழுப்பு சர்க்கரை, 1 பாக்கெட் நூடுல்ஸ், 100 கிராம் தேநீர் பாக்கெட், நெத்தலி 250 கிராம், 2 சோப்பு மற்றும் 1 பாக்கெட் பப்படம் ஆகியவை அடங்கும். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.