14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது காதல் விவகாரத்தில் குழப்பமடைந்த தந்தை மற்றும் மாமாவினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கம்பளை பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கூறப்படும் விவகாரம் தொடர்பாக அந்த இளம்பெண்ணை முதலில் அவரது மாமாவினால் தாக்கப்பட்டதாகவும், வலியால் அவதிப்பட்ட நிலையில் நேற்று காலை மீண்டும் அவரது தந்தையால் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரின் தொடர் தாக்குதலால் குழந்தையின் தாய் தனது மகளுடன் வேறு வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் மயங்கி விழுந்த இளம்பெண் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பாடசாலை மாணவியின் தந்தை மற்றும் மாமா ஆகியோரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. (யாழ் நியூஸ்)