இந்தியாவிடம் இருந்து மேலும் $1.4 பில்லியன் கடன்!

இந்தியாவிடம் இருந்து மேலும் $1.4 பில்லியன் கடன்!


இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவிடம் இருந்து மேலும் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை பரிமாற்று முறைமையின் கீழ் பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.


இந்த நிதி தற்போது இந்தியாவினால் வழங்கப்படவுள்ள 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான கடன் ஒப்பந்தத்திற்கு மேலதிகமாக பெறப்படவுள்ளது.


அதற்கமைய, குறித்த 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.


இந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்தவுடன் அதன் விதிமுறைகள் அறிவிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.