இளையோர் பரா ஒலிம்பிக் போட்டிகளில் 11 பதக்கங்களை பெற்ற இலங்கை!

இளையோர் பரா ஒலிம்பிக் போட்டிகளில் 11 பதக்கங்களை பெற்ற இலங்கை!


ஆசிய இளையோர் பரா விளையாட்டுப் போட்டியின் முதல் மூன்று நாட்கள் முடிவில் இலங்கை அணி மூன்று தங்கப் பதக்கங்கள் உட்பட 11 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஆசிய இளையோர் பாரா விளையாட்டுப் போட்டிகள் பஹ்ரைனில் நடைபெற்று வருகின்றது. அதன்படி நீச்சல் போட்டிகளில் 4 பதக்கங்களையும், மற்றைய போட்டிகளில் 7 பதக்கங்களையும் வீராங்கனைகள் வென்றுள்ளனர்.

நீச்சலில் லைசியம் சர்வதேச பாடசாலையின் கலினா பஸ்நாயக்க இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். குளியாப்பிட்டிய சுரதூத பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜனனி விக்கிரமசிங்க தடகளப் போட்டியில் மூன்று வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.

இதேவேளை கெக்குனகொல்ல அரக்யால முஸ்லிம் கல்லூரியைச் சேர்ந்த மொஹமட் சஃப்ரான் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.(யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.