இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஜனவரி 1ஆம் திகதி முதல் பொது இடங்களுக்குச் செல்வதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் முன்னதாக பத்திரிகையொன்றுக்கு தெரிவித்திருந்தார்.
கொரோனா சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கடைப்பிடிக்காததே பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதற்கான முக்கிய காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)