உகாண்டா நாட்டிடம் தனது கைவரிசையை காட்டிய சீனா; நாட்டின் ஒரே விமான நிலையமும் பறிபோகும் அபாயம்!!
advertise here on top
advertise here on top
happy kids fun world

உகாண்டா நாட்டிடம் தனது கைவரிசையை காட்டிய சீனா; நாட்டின் ஒரே விமான நிலையமும் பறிபோகும் அபாயம்!!


சுமார் 207 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் தொகை எனவும் 20 ஆண்டுகள் கடன் காலம், 07 ஆண்டுகள் கருணை காலம் எனவும் இதற்கு இரண்டு சதவிகிதம் வட்டி என ஒப்புக்கொண்டு இந்த கடன் தொகையை உகாண்டாவுக்கு வாரி வழங்கியது சீன அரசு.


இதனிடையே உகாண்டா தனது கடன் தொகையை செலுத்த இயலவில்லை என தெரிகிறது. கடனை திருப்பச் செலுத்த முடியாமல் போனால் எண்டெபெ விமான நிலையத்தை (Entebbe International Airport) சீனா கையகப்படுத்திக் கொள்ளலாம் என்பதே இந்த கடன் ஒப்பந்தத்தின் ஆபத்தான ஷரத்தாகும்.


இதனைத் தொடர்ந்து உகாண்டா அதிபர் யோவேரி முசேவெனி உயர்மட்ட குழுவினரை சீனாவுக்கு அனுப்பி வைத்தார். அபாயகரமான அந்த ஷரத்தை நீக்கக் கோரி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சீனா தனது ஒப்பந்த விதிகளை தளர்த்த முடியாது என மறுத்திருக்கிறது. 


இதன் மூலம் உகாண்டா தனது ஒரே ஒரு சர்வதேச விமான நிலையத்தை சீனாவிடம் இழக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் இந்த கடன் ஒப்பந்தத்தில் எந்த சர்வதேச பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதால் பிற சர்வதேச அமைப்புகளின் உதவியையும் உகாண்டா கோர முடியாது என தெரிகிறது.


கடந்த வாரம் உகாண்டாவின் நிதியமைச்சர் மதியா கசாய்ஜா சீனாவுடனான கடன் ஒப்பந்த குளருபடிக்காக பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.