நவம்பர் 19 ஆம் திகதி சந்திர கிரகணம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, அடுத்து வரக்கூடிய அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம் நிகழ்வது வழக்கமாகும். அதன்படி சரியாக 15 நாட்களுக்குப் பிறகு சூரிய கிரகணம் நிகழ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 4ஆம் திகதி 2021 சனிக்கிழமை அன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணம் காலை 10.59 மணிக்கு தொடங்கி மாலை 3.07 மணி வரை நீடிக்கும். 4 மணி நேரம் 8 நிமிடங்கள் வரை நிகழ்கிறது என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். மேலும் இந்த நிகழ்வு அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மற்றும் அண்டார்டிக்கா உள்ளிட்ட பகுதிகளில் தெரியும் என்றும் இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி இரவு நேரத்தில் நிகழ்வதால் இலங்கையில் காண முடியாது. ஆனால் டிசம்பர் 4ஆம் தேதி கிரகணத்தை இணையத்தில் நேரடியாக பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.