மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய ஜனாதிபதி யோசனை!
advertise here on top
advertise here on top
happy kids fun world

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய ஜனாதிபதி யோசனை!


உலகம் முழுவதும் கொவிட் தொற்று பரவி வரும் நிலையில், இலங்கைக்கான வாகன இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.


நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு இதற்குக் காரணம் என அரசாங்கம் கூறியுள்ளது.


எவ்வாறாயினும், வாகனமொன்றை சொந்தமாக்கிக்கொள்ளும் கனவுடன் இருக்கும் இந்நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உரையில் மூலமாக நேற்று ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.


எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்குப் பதிலாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.


நேற்று (24) கல்யாணி பொன்நுழைவு எனப்படும் புதிய களனி பாலத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். 


"எங்களிடம் நிலக்கரி இல்லை, எண்ணெய் இல்லை, எரிவாயு இல்லை. ஆனால் எங்களிடம் தண்ணீர், காற்று, சூரிய ஒளி என்பன இருக்கிறது.


நம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் 71 சதவீதமானவை வாகனங்களுக்காக கொண்டு வரப்படுகின்றதாயின், ஏன் நாட்டுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது. நாம் இவற்றைச் சிந்தித்து தீர்வொன்றை கொண்டுவர வேண்டும்" என்றார்.Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.