பொதுமக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ள அதிவேக நெடுஞ்சாலை!

பொதுமக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ள அதிவேக நெடுஞ்சாலை!


மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம - குருநாகல் பகுதி நவம்பர் 28 ஆம் திகதி பொதுமக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ளது.


இந்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.


நான்கு பாதைகளை கொண்ட 40 கிலோமீற்றர் நீளமான இந்த வீதியில் மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருநாகல் மற்றும் யக்காபிட்டிய ஆகிய இடங்களில் ஐந்து பரிமாற்றங்கழுடன் அமைக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் 2017 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.