குழந்தைகள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இந்த அதிகரிப்பு காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே, பெற்றோர்கள் செய்ய வேண்டியது, தங்கள் குழந்தைகளை ஆதரித்து, பாடசாலை கல்வியை சீராக வைத்திருக்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
குழந்தைகள் மத்தியில் கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால், பாடசாலை கல்வியை தொடர முடியாமல் போகும் என்றும், எனவே குழந்தைகளின் கல்வியைத் தொடர பெற்றார்கள் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
குழந்தைகளையும் அவர்களின் கல்வியையும் பாதுகாப்பதற்காக தேவையற்ற பயணங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)