யுத்த காலத்தில் இறந்தவர்கள் தொடர்பில் கிளிநொச்சியில் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர்!
advertise here on top
advertise here on top
happy kids fun world

யுத்த காலத்தில் இறந்தவர்கள் தொடர்பில் கிளிநொச்சியில் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர்!

சர்ச்சைக்குரிய தேரர் எனச் சொல்லப்படும் கலகொட அத்தே ஞானசார தேரர்  இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி நேற்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஞானசார தேரர், இவ்வாறு கூறியிருந்தார்.

எங்களுக்குத் தெரியும், ஊடகவியலாளர்களுக்கு இருக்கும் பிரச்சினை வேறு வகையானது. மக்களுக்கு இருக்கும் பிரச்சினை வேறு வகையானது.

ஆனால் ஊடகவியலாளர்கள், எமது செயலணிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்குப்பட்ட விடயங்களை மாத்திரம் கேட்க வேண்டும். அதற்கு பதிலளிக்க முடியும்.

போராட்டங்கள், யுத்தங்களில் மனிதர்கள் உயிரிழக்கலாம். அது சிங்களவரா, முஸ்லிமா, தமிழரா என்ற பிரச்சினை இல்லை. உயிரிழப்பு அவர் சார்ந்த குடும்பத்திற்குத் தான் பாதிப்பு.

தமது குடும்ப உறுப்பினர்கள் போராட்ட காலத்தில் இறந்திருந்தால் அவர்களை நினைத்து வீடுகளில் விளக்கேற்றி வணக்கம் செலுத்தினால் போதும். அதனை பொது வெளியில் கொண்டுவருவதினால் மேலும் பிரச்சினை தான் உருவாக்கும்.

இந்த நிலையில் அதனைத் தடுக்கும் வகையில் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. அதற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

-எபிசி


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.