தலிபான்கள் பெண்களுக்கு விதித்த மேலும் ஒரு தடை!!
advertise here on top
advertise here on top
happy kids fun world

தலிபான்கள் பெண்களுக்கு விதித்த மேலும் ஒரு தடை!!


ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்கள் நடிக்க தலிபான் ஆட்சியாளர்கள் தடை விதித்துள்ளனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை சில மாதங்களுக்கு முன்னர் தலிபான் அமைப்பினர் கைப்பற்றினர்.

இந்நிலையில் ஆப்கனில் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என தலிபான் கூறி வரும் நிலையில் இங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து நேற்று (22) தாலிபன் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்கள் நடிக்கக்கூடாது. அதாவது திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் பெண் கலைஞர்கள் இருக்கக்கூடாது. அதேபோல் ஆண் நடிகர்களும் நிர்வாணமாக இருக்கும் வகையில் காட்சிகள் எடுக்கக்கூடாது. ஆண் கலைஞர்களின் மார்பு முதல் முழங்கால் வரை வெளியில் தெரியக்கூடாது. செய்தி சேனலில் வரும் பெண் பத்திரிகையாளர்கள் 'ஹிஜாப்' துணியால் தலைமுடி தெரியாத அளவிற்கு மூடிக்கொள்ள வேண்டும். வெளிநாட்டு கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை ஊக்குவிக்கும் வகையிலான திரைப்படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பக்கூடாது.

இஸ்லாமிய கொள்கைகள் மற்றும் ஆப்கனின் மதிப்புகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.