நாட்டில் மேலுமொரு வெடிப்பு சம்பவம் பதிவானது!!!

நாட்டில் மேலுமொரு வெடிப்பு சம்பவம் பதிவானது!!!

நிக்கவெரட்டிய, கந்தேகெதர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (26) பிற்பகல் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் எரிவாயு வெடிப்பு என சந்தேகிக்கப்படுவதாக நிக்கவெரட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெடிப்பு காரணமாக ஏற்பட்ட தீயினால் வீடு பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உரிமையாளரும் அவரது மனைவியும் வயலுக்குச் சென்றிருந்தனாலும், மூத்த பிள்ளை பாடசாலைக்கு சென்றதாலும், இளைய பிள்ளை உறவினர் வீட்டில் வைக்கப்பட்டிருந்ததாலும் உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை.

வீட்டு எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு அல்லது வேறு காரணங்களால் இந்த வெடிப்பு நிகழ்ந்ததா என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பன்னிபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று வாயு வெடிப்பு சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.

நவம்பரில் மாத்திரம் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.