நாம் மீண்டும் முடக்கத்திற்கு செல்ல தயாராகின்றோமா? விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாம் மீண்டும் முடக்கத்திற்கு செல்ல தயாராகின்றோமா? விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் !


நாட்டில் கடந்த ஒரு வாரமாக கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை வீழ்ச்சியில் மந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.


எனவே தீபாவளி பண்டிகை, திருமண வைபவங்கள் மற்றும் மரண சடங்குகள் உள்ளிட்டவற்றில் பங்குபற்றும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.


நாம் மீண்டும் பழைய முடக்க முறைமைக்கு செல்வதற்கு தயாராகின்றோமா ? அல்லது நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்கின்றோமா ? என்பதை நாமனைவரும் பொறுப்புடன் செயற்படுவதன் ஊடாகவே தீர்மானிக்க முடியும் என்றும் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தினார்.


கொழும்பில்  இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


தற்போதும் நாளாந்தம் சுமார் ஐந்நூறை அண்மித்தளவில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.


இவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்படுவதுடன் நாம் இன்னும் அபாய கட்டத்திலேயே இருக்கின்றோம் என்பது தெளிவாகிறது. 


இந்த நிலைமைக்கு மத்தியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் வீதமும் மந்தமடைந்துள்ளது.


கடந்த ஒரு வார காலமாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐநூறுக்கும் அதிகமாகவும் காணப்படுகிறது. அதாவது தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி அவதானிக்கப்படவில்லை. 


போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்பாடு செய்யப்படுகின்ற திருமண வைபங்கள், மரண சடங்குகள், உற்சவங்கள், மக்கள் ஒன்று கூடுதல் உள்ளிட்ட அனைத்து காரணிகளும் இதில் தாக்கம் செலுத்துவது தெளிவாகிறது.


எனவே நாம் மீண்டும் பழைய முடக்க முறைமைக்கு செல்வதற்கு தயாராகின்றோமா ? அல்லது நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்கின்றோமா? என்பதை நாமனைவரும் பொறுப்புடன் செயற்படுவதன் ஊடாகவே தீர்மானிக்க முடியும். 


இவ்வார இறுதி நீண்ட விடுமுறை காலமாகும். இதன் போது அநாவசிய பயணங்களை தடுக்க முடியுமெனில் அதுவே முக்கியத்துவமுடையதாகும்.


தீபாவளி பண்டிகை உள்ளிட்ட சமயம் சார் நிகழ்வுகள் மக்கள் ஒன்று கூடுவதற்கு வாய்ப்பளிப்பவையாகும்.


இதன் போது அத்தியாவசியமானவர்கள் மாத்திரம் இவற்றில் பங்குபற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.


இதனுடன் தொடர்புடைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்துகின்றோம்.


அத்தோடு ஏதேனுமொரு வகையில் தொற்று அறிகுறிகள் அல்லது உடல்நலக் குறைவு காணப்படுமாயின் அவ்வாறானவர்கள் இது போன்ற நிகழ்வுகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று சகலரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.


-எம்.மனோசித்ரா


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.