பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு விசேட துஆ பிரார்த்தனை!

பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு விசேட துஆ பிரார்த்தனை!


பிரதமர் மஹிந்த ராஷபக்‌ஷ அவர்களது 76ஆவது பிறந்த தினத்தையொட்டி அவர்களுக்கு ஆசி வேண்டி ஒழுங்கு செய்யப்பட்ட விசேட துஆப் பிராத்தனை ஒன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார் அவர்களது தலைமையில் இன்று (17) காலை தெஹிவளை ஜூம்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.

புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

கௌரவ பிரதமரின் முஸ்லிம் சமய விவகார இணைப்பாளர் அஷ்ஷெய்க் ஹசன் மௌலானா அவர்கள் சிங்கள மொழியிலும், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் கொழும்பு தெற்கு கிளையின் தலைவர் அஷ்ஸெய்க் அப்துல் அஸீஸ் அவர்கள் தமிழிலும்  விசேட துஆப் பிரார்த்தனைகளை நடத்தினார்கள். 

இதில் நீதி அமைச்சர் அலி சப்ரி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், மர்ஜான் பளீல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அலா அகமட், பிரதமரின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் பர்சான் மன்சூர், திணைக்களத்தின் அதிகாரிகள், தெஹிவலை பள்ளிவாசல் தலைவர் மற்றும்  நிருவாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் பள்ளிவாசல்களில் நீண்டகாலம் கடமையாற்றியவர்களுக்கு கொழும்பு மாவட்ட முஅத்தின் மற்றும் கதீப்மார் சம்மேளனத்தின் ஏற்பாட்டில்  சான்றிதழ்களும் காப்புறுரி நன்கொடைகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.