
ஒரே நேரத்தில் 25 பேர் வரை பயணிக்கக்கூடிய வகையில் இந்தப் படகு சேவை முன்னெடுக்கப்படுவதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.
படகில் ஏறுதல் இறங்குதல் நடவடிக்கைக்காக பாதுகாப்பான தற்காலிக இறங்குதுறையொன்றையும் கடற்படையினர் அமைத்துள்ளனர்.
நேற்று முதல், காலை 7.00 - 8.00 மணி வரையும் பிற்பகல் 12.00 மணி முதல் 2.00 மணி வரையும் இச்சேவை முன்னெடுத்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த பால நிர்மாண பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், அப்பணிகள் நிறைவடையும் வரை, பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் எதிர்நோக்கும் அசௌகரியத்தை கருத்திற் கொண்டு குறித்த படகுச் சேவையை முன்னெடுக்கவுள்ளதாக கடற்படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்து அனர்த்தத்திற்குள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, அந்தப் பாலத்தின் உரிமையாளர் உட்பட 3 பேருக்கும் அடுத்த மாதம் 08 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் விதிக்கப்பட்டுள்ளதோடு, கிண்ணியா நகரசபை தலைவருக்கு டிசம்பர் 09ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.


