உண்மையில் நீதி அமைச்சர் அலி சப்ரி இராஜினாமா செய்யவுள்ளாரா?

உண்மையில் நீதி அமைச்சர் அலி சப்ரி இராஜினாமா செய்யவுள்ளாரா?

நீதியமைச்சர் பதவியிலிருந்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையிலிருந்தும் இராஜினாமா செய்வது தொடர்பிலான கடிதத்தை அமைச்சர் அலி சப்ரி தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கடிதத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க அலி சப்ரி சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

ஒரு நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எவ்வாறாயினும், அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தாம் தீர்மானிக்கவில்லை என அலி சப்ரி தெரிவித்திருந்தார்.

பின்னர் இன்று நீதி அமைச்சர் அலி சப்ரியின் இராஜினாமா கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டதாக அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை ஜனாதிபதியை சந்தித்து தனது இராஜினாமா கடிதத்தினை வழங்க சென்ற அமைச்சர் அலி சப்ரியினால் முன்வைக்கப்பட்ட இராஜினாமா கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.