தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை பொறுத்தமற்றது! -டிலான் போர்க்கொடி

தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை பொறுத்தமற்றது! -டிலான் போர்க்கொடி


ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலளார் ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளமை பொருத்தமற்ற செயற்பாடாகும்.


சிறந்த நோக்கத்திற்கான செயலணிக்கு அவர் தகுதியற்றவர். ஞானசார தேரரும், அருட்தந்தை சிறில்காமினியும் நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவர்கள் இருவரும் அடிப்படைவாதிகள் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,


ஐக்கிய தேசிய கட்சி நிதிமோசடியில் ஈடுப்பட்டாலும், எமது அரசாங்கம் நிதி மோசடியில் ஈடுப்பட்டாலும் தவறு என குறிப்பிடுவேன்.


ஏனெனில் என்னை திருடன் என எவரும் குறிப்பிட முடியாது. அரச நிதி மோசடியாளர்களுக்கு கட்சி பேதமின்றி தண்டனை வழங்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.


அரசியல் சேறுபூசல் எல்லை கடந்து சென்றுள்ளது. பாராளுமன்றில் எதிர்க்கட்சி தலைவரின் மகன் இரவு களியாட்ட விடுதிக்குச் சென்ற கானொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.


அதனை கொண்டு ஒரு தரப்பினர் அரசியல் சேறு பூசலை ஆரம்பித்து விட்டார்கள். இவ்வாறான செயற்பாடு முற்றிலும் தவறானது. 


அரசியல்வாதிகளின் பிள்ளைகள் இரவு  களியாட்ட விடுதிக்கு செல்வதில் என்ன தவறு உள்ளது?அனைத்தையும் அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ள கூடாது.


எதிர்மறையாக கொள்கையுடையவர்கள்  நல்லதை செய்தாலும் அதனை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் தன்மையே அரசியல் நிலைரத்தில் காணப்படுகிறது.


இனவாதத்தையும், மதவாதத்தையும் அடிப்படையாகக்கொண்டு அரசியலில் செயற்படவில்லை.பௌத்த மதம் அறத்தை அடிப்படையாகக் கொண்டது.


'ஒரே நாடு-ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை தலைவராக நியமித்துள்ளமை பொருத்தமற்ற செயற்பாடாகும். சிறந்த கொள்கைக்கான ஜனாதிபதி செயலணிக்கு அவர் தகுதியற்றவர்.


மறுபுறம் அருட்தந்தை சிறில்காமினியும் ஒருவகையில் அடிப்படைவாதி முஸ்லிம் பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்பில் பொய்யுரைத்துள்ளார்.


அந்த அதிகாரி முஸ்லிம் என்ற காரணத்தினால் இவ்விடயம் தொடர்பில் குற்றபுலனாய்வு பிரிவிற்கு சாட்சியமிக்கவும் ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்தார்.


-இராஜதுரை ஹஷான்


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.