நேற்று காலை பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் மோதி 43 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் அவர் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை நேற்று (26) இரவு வெள்ளவத்தை ராமகிருஷ்ணா வீதி சந்திக்கு அருகில் 48 வயதுடைய நபரொருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் கொழும்பில் இருந்து தெஹிவளை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த இருவரின் சடலங்களும் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)