கிண்ணியா மிதப்பு பாலம் விபத்து தொடர்பில் மேலுமொருவர் கைது!

கிண்ணியா மிதப்பு பாலம் விபத்து தொடர்பில் மேலுமொருவர் கைது!


கிண்ணியா - குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் கவிழ்ந்து 06 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நலீம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


கைதானவர் திருகோணமலை நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்துவதற்காக இன்று (25) பிற்பகல் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருகோணமலை - குறிஞ்சாக்கேணி பகுதியில் மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் நேற்று முன்தினம் கவிழ்ந்ததில் 04 மாணவர்கள் உட்பட அறுவர் பலியாகினர்.


இந்தச் சம்பவத்தை மையப்படுத்தி கிண்ணியா நகர சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் மிதப்பு பால உரிமையாளர் உட்பட மூவர் நேற்று கைது செய்யப்பட்டு, திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் டிசம்பர் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.