ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர்கள் குறித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர்கள் குறித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, உட்பட சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் 63 பேரையும் டிசம்பர் மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் இன்று (25) உத்தரவிட்டார்.


இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக வழக்கு விசாரணைகள் நடைபெற்றபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் காத்தான்குடியை சேர்ந்த 65 பேரை கைது செய்தனர்.


அதேவேளை சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், உட்பட 04 பேரை மட்டக்களப்பு பொலிசார் கைது செய்தனர். இரு வெவ்வேறு வழக்குகளை கொண்ட 69 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.


இவர்களில் 05 பேர் வழக்கில் இருந்து விடுவித்து விடுவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 64 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் குறித்த வெவ்வேறு இரு வழக்கு இலக்கங்களை கொண்ட 64 பேரும் நாட்டிலுள்ள பொலநறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.


கடந்த மாதம் சஹ்ரானின் மனைவி பிணை மனுதாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


-கிருஷ்ணகுமார்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.