துபாயில் அறிமுகமாகவுள்ள பறக்கும் கார்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துபாயில் அறிமுகமாகவுள்ள பறக்கும் கார்கள்!


விரைவில் துபாய் போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல்கள் கடந்த கால விடயமாக இருக்கும், ஏனெனில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்று பறக்கும் கார்களை துபாயில் அறிமுகம் செய்யவுள்ளது.


புளோரிடாவைச் சேர்ந்த LuftCar நிறுவனம், ஹெலிகாப்டரைப் போலவே (eVTOL) ஆறு உந்துவிசைகளுடன் இணைக்கப்பட்ட, பறக்கும் தொகுதியிலிருந்து பிரிக்கப்படக்கூடிய, செங்குத்தாக தரையேற்ற மற்றும் தரையிறங்கக்கூடிய தானியங்கி வாகனத்தை உருவாக்கி வருகிறது.


The electric vertical takeoff and landing (eVTOL) காரானது அதிகபட்சமாக 300 மைல்கள் தூரம் மற்றும் 4000 அடி உயரத்தில் மணிக்கு 220 மைல்கள் வேகத்தில் செல்லக்கூடியதாக இருக்கும். அதே நேரத்தில், தரையில் 150 மைல் வேகத்தில் பயணிக்கூடியது.


இன்று அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் தொடங்கிய Dubai Airshow 2021 இல்  இந்த நிறுவனம் பங்கேற்கிறது.


மேலும் ஹைட்ரஜனில் இயங்கும் இந்த வாகனம், 2023-24 ஆவது ஆண்டளவில் வணிகமயமாக்கலுக்கு அமைக்கப்பட்டுள்ளது, கார்ப்பரேட் உலகம் மற்றும் அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்களுக்கு $350,000 (1.3 மில்லியன் திர்ஹம்) விலை நிர்ணயம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.