தேசியப் பரீட்சைகளுக்கான பரீட்சை வினாத்தாள்களில் மாற்றமே தவிர உள்ளடக்க விடயங்கள் குறைக்கப்பட மாட்டாது!

தேசியப் பரீட்சைகளுக்கான பரீட்சை வினாத்தாள்களில் மாற்றமே தவிர உள்ளடக்க விடயங்கள் குறைக்கப்பட மாட்டாது!


இம்முறை தேசியப் பரீட்சைகளுக்கான வினாத்தாள் தயாரிப்பில் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அலகுகளின் எண்ணிக்கையில் எவ்வித குறைப்பும் ஏற்படாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா நேற்று (14) தெரிவித்தார்.


இந்த ஆண்டு வினாத்தாள் தயாரிப்பில் பாடப் உள்ளடக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என பரவி வரும் வதந்திகள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு உள்ளடக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று சில அரசுப் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி வகுப்புகளின் ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தெரிவித்துள்ளனர். 


சிக்கலான பாடப் பிரிவுகள் குறைக்கப்படும் என்று சில ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆனால் மற்ற ஆசிரியர்கள் இலகுவான பாடப் பிரிவுகள் நீக்கப்படும் என்று கூறியுள்ளனர்.  இந்த நிலை குறித்து இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மிகுந்த குழப்பத்துடன் உள்ளனர்.


பரீட்சை எழுத போதிய கால அவகாசம் உள்ளதால் பாடப்பிரிவுகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.


புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.  க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நன்றி: teachmore.lk


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.