குறைந்து செல்லும் திருமணப் பதிவுகள்: இலங்கை திருமண பதிவு புள்ளிவிபரம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குறைந்து செல்லும் திருமணப் பதிவுகள்: இலங்கை திருமண பதிவு புள்ளிவிபரம் வெளியானது!

2019 மற்றும் 2020 க்கு இடையில் இலங்கையில் திருமண பதிவுகளின் எண்ணிக்கை 12% குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் மொத்தம் 163, 378 திருமண பதிவுகள் பதிவாகியுள்ளதாகவும், 2020 ஆம் ஆண்டில் 143,061 ஆக குறைந்துள்ளதாகவும் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

2020 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான திருமண பதிவுகள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளன, 14, 617 திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளன.

2000-2012 காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2013 - 2020 க்கு இடையில் திருமண பதிவுகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

2000-2012 க்கு இடையில் கிட்டத்தட்ட 200,000 திருமண பதிவுகள் பதிவாகியுள்ளன.

2000 ஆம் ஆண்டில் மொத்தம் 194,217 திருமணங்களும் 2005 இல் 195,067 திருமணங்களும் பதிவாகியுள்ளன, 2010 இல் 200,985 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டன.

எவ்வாறாயினும், 2015 இல் 175,939 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டதன் மூலம் அதன் பின்னர் ஒரு குறைவு காணப்பட்டது.

திணைக்களத்தின் படி, 2020 இல் 143,061 திருமணங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டதன் மூலம் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.