சிக்கரட் கொள்வனவுக்கு நீண்ட வரிசை - ஒருவருக்கு ஒரு பக்கட் மாத்திரமே!

சிக்கரட் கொள்வனவுக்கு நீண்ட வரிசை - ஒருவருக்கு ஒரு பக்கட் மாத்திரமே!

அளுத்கமவில் அமைந்துள்ள பிரபல நிறுவனமொன்றின் சிகரெட் விற்பனை நிலையத்திலிருந்து சிகரட்களை கொள்வனவு செய்வதற்கு சிறுதொழில்களில் ஈடுப்டும் மக்கள் பல மணிநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அங்கு இருந்த காவல் அதிகாரி ஒருவர் நீண்ட நேரம் வரிசையில் நின்றவர்கள் வெளியே தெரியாமல் கதவை அடைத்துள்ளார்.

மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்தாலும் ஒருவருக்கு 20 அடங்கிய சிகரெட் பக்கட் மாத்திரமே வழங்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

சிகரெட் கொள்வனவு செய்ய வந்தவர்களில் பெண்களும் கலந்துகொண்டது சிறப்பு அம்சமாக இருந்ததுடன், தங்களது வாழ்வாதாரமாக ஹோட்டல்கள், உணவகங்கள், சில்லறை விற்பனை நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்ளுக்கு சிகரெட்டை விற்பனை செய்யவும், பிற பொருட்கள் மற்றும் உணவுகளை விற்பனை செய்வதற்கும் சிகரெட் கையிருப்பில் வைக்கவுமே கொள்வனவு செய்துள்ளனர். சிகரெட் இல்லாத விற்பனை நிலையங்களில் மற்றைத பொருட்களை விற்பனை செய்வதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.