விமானத்தின் லேண்டிங் கியருக்குள் ஒளிந்து வந்த நபர்! வைரலாகும் வீடியோ!
advertise here on top
advertise here on top
happy kids fun world

விமானத்தின் லேண்டிங் கியருக்குள் ஒளிந்து வந்த நபர்! வைரலாகும் வீடியோ!


விமானம் ஒன்றின் லேண்டிங் கியருக்குள் சுமார் 26 வயது மதிக்கத்தக்க நபர் ஒளிந்து வந்திருக்கும் சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் நேற்றைய தினம் (27) Guatemala-வில் இருந்து Miami-க்கு புறப்பட்டுள்ளது. விமானம் சரியாக இரண்டரை மணி நேர பயணத்தை தொடர்ந்து, Miami விமானநிலையத்தில் சரியாக உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு தரையிரங்கியுள்ளது.


அப்போது விமானத்தின் லேண்டிங் கியருக்குள் (விமானத்தை இறக்க உதவும் சக்கரம்) Guatemala-வைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க நபர் பதுங்கியிருப்பது அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார்.


சுமார் இரண்டரை மணி நேர பயணம், விமானம் சராசரியாக 30,000 மற்றும் 42,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும், அப்போது வெப்பநிலை -54 F-வுக்கும் குறையாமல் இருந்திருக்கும், ஆக்ஸிஜன் அளவு குறைந்திருக்கும்.


இதை எல்லாம் தாண்டி அவர் எப்படி வந்தார் என்ற ஆச்சரியம் அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ளது.


உடனடியாக மருத்துவர்களை அழைத்த அதிகாரிகள் அவரை பரிசோதித்துள்ளனர். அவருக்கு எந்த ஒரு காயமும் அந்தளவிற்கு ஏற்படவில்லை. அதன்பின்னர் அவர் அங்கிருக்கும் உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


யார் அவர்? எப்படி இங்கே பதுங்கினார் என்பது குறித்த எந்த ஒரு விபரமும் வெளியாகவில்லை. விமான நிறுவனமும், இது குறித்து எந்த ஒரு தெளிவான விளக்கமும் அளிக்கவில்லை.Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.