60 அத்தியாவசிய மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

60 அத்தியாவசிய மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!


அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, 60 அத்தியாவசிய மருந்துகளை சேர்ந்த 131 டோஸ்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டு, அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துகளில் எதனையும் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்பனை செய்வது சட்டவிரோதமானது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏதாவது ஒரு இடத்தில் கட்டுப்பாட்டு விலையை மீறி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டால் complaints@nmra.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக அறிவிக்க முடியும் என அமைச்சின் செயலாளர் வைத்தியர் ஆர்.எம.எஸ்.கே ரத்நாயக்க தெரிவித்தார்.

டொலரின் பெறுமதி அதிகரித்த கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நூற்றுக்கு 9 சதவீதத்தால் விலை அதிகரிக்க அனுமதி வழங்கியதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.