நிந்தவூர் அல் - அஷ்ரக்கில் இருந்து 48 மாணவர்கள் பல்கலைக்குத் தெரிவு!

நிந்தவூர் அல் - அஷ்ரக்கில் இருந்து 48 மாணவர்கள் பல்கலைக்குத் தெரிவு!


பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்ட Z score வெட்டுப்புள்ளியின் பிரகாரம் இம்முறை நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து 48 மாணவர்கள் நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 5 வருட காலத்தில் இருந்து மாணவர்களின் பல்கலைக்கழக உட்பிரவேசம் அதிகரித்து வருகின்றமை இப்பாடசாலைக்கு நாடளாவிய ரீதியில் நற்பெயரை ஈட்டித்தந்துள்ளது.

இதற்காக உழைத்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும், அண்மைக்காலமாக சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கி, பாடசாலையின் பாடவிதான, இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறப்பான முன்னேற்றத்துக்கு உழைத்துக்கொண்டிருக்கின்ற கல்லூரியின் அதிபர் ஏ.அப்துல் கபூர், மாணவர்களின் முன்னேற்றத்துக்கு பங்காற்றிய அனைத்து சமூக நிறுவனங்களுக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.