எயார்பஸ் ஒப்பந்த இரத்து; 400 கோடி ரூபா நிதி மோசடி!

எயார்பஸ் ஒப்பந்த இரத்து; 400 கோடி ரூபா நிதி மோசடி!


எயார்பஸ் ஒப்பந்தத்தை இரத்து செய்து நட்டஈடு வழங்கிய போது, நல்லாட்சி அரசாங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ.400 கோடி) மோசடி செய்துள்ளனர் என, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார்.


திருடுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம், முன்னைய அரசாங்கத்தைப் போலவே திருட்டுச் செயல்களை மேற்கொண்டதாகச் சுட்டிக்காட்டினார்.


தற்போதைய அரசாங்கத்தை வேண்டாம் என்று கூறும் மக்கள் மாற்று வழி குறித்து கேள்வி எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.


மீரிகம முத்தரகம பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.