இன்று (09) ஆசிரியர் - அதிபர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மாத்தறை, கொட்டபொல தேசிய கல்லூரிக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசிரியர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் தெனியாய மத்திய கல்லூரியின் 27 வயதுடைய ஆசிரியை எனவும், இவர் முன்னர் இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் அவர் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அவர் இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கங்கள் இன்று நாடு முழுவதும் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)