2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நிறைவேற்றப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நிறைவேற்றப்பட்டது!


2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு 93 மேலதிக  வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.


இதற்கு 153 ஆதரவாக வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம் பிக்களான ஹரீஸ், பைஸல் காசிம், நஸீர் அஹமத், மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான இஷாக் ரகுமான், முஷர்ரப், அலி சப்ரி ரஹீம் ஆகியோர் ஆதரவாக வாக்களித்த அதேவேளை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம் பிக்களான ரவுப் ஹக்கீம், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுத்தீன் உள்ளிட்டவர்கள் எதிராக வாக்களித்தனர்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இம்மாதம் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.