150 அடி மேல் இருந்து கீழாக கவிழ்ந்த லொரி!

150 அடி மேல் இருந்து கீழாக கவிழ்ந்த லொரி!

ஹெம்மாதகம, கம்பளை வீதியில் முதலாம் தூண் (கட்டை) பகுதியில் மரக்கட்டை ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹெம்மாதகம பகுதியில் இருந்து கம்பளை நகருக்கு மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று, லொறியில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது. ஓட்டுநரினால் கட்டுப்படுத்த முடியாத லொரி வண்டி, வீதியின் மேல் வளைவில் இருந்து அதே வீதியில் கீழ் வளைவில் அமைந்துள்ள 150 அடிக்கும் மேற்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது.

லொரியில் ஏற்றிச் செல்லப்பட்ட மரக்கட்டைகள் ஆங்காங்கே சிதறி லொரி பலத்த சேதமடைந்தது. செங்குத்தான சரிவுகள் கொண்ட இந்த வீதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நடப்பதால் வாகன ஓட்டுநர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வீதியை மாவனல்லையில் இருந்து ஹெம்மாதகம, கம்பளை வரையான வீதியாக பலர் பயன்படுத்துகின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.