இனி வாட்ஸாப் இயங்காது! நீண்ட பட்டியல் ஒன்றை வெளியிட்ட வாட்ஸாப் நிறுவனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனி வாட்ஸாப் இயங்காது! நீண்ட பட்டியல் ஒன்றை வெளியிட்ட வாட்ஸாப் நிறுவனம்!


2021 ஆம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில் வாட்ஸாப் நிறுவனம் பயனர்களுக்கு ஒரு அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.


அந்த வகையில் இந்த வருடத்தின் நிறைவில் வாட்ஸாப்பின் மற்றொரு ஒத்துழைப்பு சுழற்சியும் முடிவடையவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.


அதனடிப்படையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 01ஆம் திகதி முதல் வாட்ஸாப் செயலி ஒரு சில பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் ஐபோன்களிலும் வாட்ஸாப் ஒத்துழைப்பு வழங்காது என்பதற்கான நீண்ட பட்டியலை அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.


இதன்படி பழைய OS பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போன்களிலும், ஆப்பிள் ஐபோன்களிலும் இனி வாட்ஸாப் பயன்படுத்த முடியாது என அறிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


ஆண்ட்ராய்டு போன்களில் Android 4.0.3 அல்லது அதற்கும் குறைவான OS வெர்ஷன் பயன்படுத்தும் மொடல்களிலும், ஆப்பிள் ஐபோன்களில் iOS 9 அல்லது அதற்கும் குறைவான பயன்படுத்தும் மொடல்களிலும் இனி வாட்ஸாப் பயன்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளது.


இதேவேளை iPhone 4S மற்றும் அதற்கும் முந்தைய வெர்ஷன்கள் கொண்ட சாதனங்களில் வாட்ஸாப்பினை பயன்படுத்த முடியாது.


ஆண்டிராய்டு OS கொண்ட ஸ்மார்ட்போன்களில், சாம்சங், எல்.ஜி, ஹூவாய், சோனி மற்றும் பிற வகை ஃபோன்களில், நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் கீழே வழங்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்தால், உங்களால் வாட்ஸாப்பினை பயன்படுத்த முடியாது.


Samsung:

Galaxy Trend Lite, Galaxy Trend II, Galaxy S2, Galaxy S3 mini, Galaxy Xcover 2, Galaxy Core, Galaxy Ace 2


LG:

LG Lucid 2, Optimus F7, Optimus F5, Optimus L3 II Dual, Optimus F5, Optimus L5, Optimus L5 II, Optimus L5 Dual, Optimus L3 II, Optimus L7,Optimus L7 II Dual, Optimus L7 II, Optimus F6, Enact, Optimus L4 II Dual, Optimus F3, Optimus L4 II, Optimus L2 II, Optimus Nitro HD and 4X HD, Optimus F3Q


ZTE:

ZTE Grand S Flex, ZTE V956, Grand X Quad V987, Grand Memo


Huawei:

Huawei Ascend G740, Ascend Mate, Ascend D Quad XL, Ascend D1 Quad XL, Ascend P1 S, Ascend D2


Sony:

Sony Xperia Miro, Sony Xperia Neo L, Xperia Arc S


ஏனையவை:

Alcatel One Touch Evo 7, Archos 53 Platinum, HTC Desire 500, Caterpillar Cat B15, Wiko Cink Five, Wiko Darknight, Lenovo A820, UMi X2, Faea F1, THL W8


போன்றவை வாட்ஸாப் ஒத்துழைப்பு செய்யாத ஸ்மார்ட்போன்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ( யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.