VIDEO: நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் வாட்ஸப் அழைப்புக்களை பதிவு செய்த புலனாய்வு பிரிவினர்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் வாட்ஸப் அழைப்புக்களை பதிவு செய்த புலனாய்வு பிரிவினர்?

தமது வாட்ஸ்அப் (Whatsapp) அழைப்புக்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பதிவு செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றும் போது இதை குறிப்பிட்டார்.

வாட்ஸ்அப் அழைப்புக்களை ஒட்டு கேட்க முடியாத அளவிலான தொழில்நுட்பம் காணப்படுகின்ற போதிலும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏதோ ஓர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒட்டுக் கேட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றின் உத்தரவின் அடிப்படையில் மட்டுமே தொலைபேசி உரையாடல்களை விசாரணை செய்ய முடியும்.

ஆனால் சமீபத்தில் தாம் வாட்ஸ்அப் பயன்படுத்தி பேசிய உரையாடல்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தபோது செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் குறித்து கடந்த மாதம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட விசாரணையில் அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்போது 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அவரது தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டமை தெரியவந்தது என்று சம்பிக்க கூறினார்.

Whatsapp වලට හොරෙන් සවන්දෙන්න පුළුවන් ඊශ්‍රායල් පෙගසස් ස්පයිවෙයා එකෙන් විතරයි CIDය සතුවත් එය තිබේදැයි වහාම හෙළිකරන්න

Posted by Patali Champika Ranawaka on Thursday, 21 October 2021

මහේස්ත්‍රාත් නියෝගත් නොමැතිව දුරකථන ටැප් කරන්නේ කාගේ බලයටද? දුරකථන වලට හොරෙන් සවන්දෙන CID අධ්‍යක්ෂට එරෙහි විමර්ශනයක් අරඹන්න

Posted by Patali Champika Ranawaka on Thursday, 21 October 2021

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.