PHOTOS: சடலத்தை இழுத்துச் செல்லும் முதலை - கொழும்பில் அதிர்ச்சிச் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: சடலத்தை இழுத்துச் செல்லும் முதலை - கொழும்பில் அதிர்ச்சிச் சம்பவம்!


ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள கிம்புலாவலவில் உள்ள தியவன்ன ஓயாவில் முதலை ஒன்று மனித சடலத்தை இழுத்துச் செல்லும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தியவன்ன ஓயாவில் ஆண் ஒருவரின் சடலத்தை வாயில் கடித்து இழுத்துக் கொண்டு இராட்சத முதலை மிதந்து வருவதை பொது மக்கள் அவதானித்துள்ளதுடன், காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

நேற்று மாலை 5.45 மணியளவில் நாடாளுமன்ற பகுதியிலிருந்து குறித்த முதலை மனித சடலத்துடன் கிம்புலாவல பாலத்திற்கு வந்துள்ளது.

மேலும் பாலத்திற்கு கீழே சென்ற முதலை சடலத்தை விட்டுச்சென்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் தொடர்பான அடையாளம் இதுவரை காணப்படவில்லை.

சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.