கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதை குறிப்பிட்டார்.
இந்த அரிசி சதோச மற்றும் அங்காடி வர்த்தக நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ ரூபா 100 க்கு குறைவாக பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் கூறினார்.
இதேவேளை, எதிர்வரும் காலப்பகுதியில் மேலும் சில அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.