உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றின் இயக்கத்தில் பெரிய கோளாறு ஏற்பட்டுள்ளது.
வட அமெரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள், இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளிலும் இவை அனைத்தும் முடங்கியுள்ளன.
இலங்கை நேரப்படி, அக்டோபர் 04 இரவு சுமார் 9.20 மணி முதல் பல சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் இந்த பிரச்சினையை எதிர்கொண்டனர்.
பலர் தங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப் போன்ற கணக்குகளில் நுழைய முடியாத நிலையில் இருப்பதாகக் கூறுகின்றனர்.
உலகில் அதிக பயனாளர்களைக் கொண்டிருக்கும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் செயல்பாட்டில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதால் நெட்டிசன்கள் ட்விட்டர் போன்ற தளங்களில் இது பற்றி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)