நானோ நைட்ரஜன் திரவ உரத்தை பரிசோதித்து கள பரிசோதனை செய்து விவசாயிகளுக்கு விடுவித்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, இந்தியாவில் விவசாயிகளிடையே கூட, இந்த உரத்தைப் பயன்படுத்துவதில் அனுபவம் இல்லை எனவும், நனோ நைட்ரஜன் திரவ உரமமும் முற்றிலும் இரசாயன உரமாகும் எனவும் தெரிவித்தார்.
மேலும் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் பேட்டன் உரிமம் இலங்கையில் இருந்ததாகவும், அதனை சரியான முறையில் கையாலாமல் இருந்த காரணத்தினால், இந்தியாவுக்கு உரிமம் விற்பக்கப்பட்டதை குறித்து கவலை தெரிவிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எமக்கு சொந்தமான உரத்தினை நாமே பணம் கொடுத்து கொள்வனவு செய்யப்படும் அளவிற்கு நாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் கவலை தெரிவித்தார்.
(யாழ் நியூஸ்)