மக்களின் நலனுக்காகவே விலைகளை அதிகரித்துள்ளோம்!

மக்களின் நலனுக்காகவே விலைகளை அதிகரித்துள்ளோம்!


மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் காத்திருக்க வைப்பதா அல்லது ஏதேனும் ஒரு வகையில் மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதா சிறந்தது என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டுமென அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.


பொருட்களின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


மக்களை வரிசையில் காத்திருக்க வைப்பதா அல்லது பொருட்களை கொண்டுவந்து சாதாரண விலைக்கு அல்லது சற்று ஏற்றுக்கொள்ளக்கூடிய விலை அதிகரிப்புடன் பொதுமக்களுக்கு வழங்குவதா சிறந்தது என்பது மக்களுக்கு தெரியும்.


எவ்வாறாயினும், மக்களை வரிசையில் காத்திருக்க வைப்பதே எதிர்க்கட்சிகளுக்கு விருப்பம். அவ்வாறான நிலைமை காணப்பட்டால் மாத்திரமே அவர்களால் அரசாங்கத்தை தொடர்ந்து விமர்சிக்க முடியுமெனவும் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.