இன்று முதல் எந்தத் திகதியிலும் பல்கலைக்கழகங்களை துணைவேந்தர்கள் மீண்டும் திறக்க முடியும் என யுஜிசியின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கோவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு பல்கலைக்கழகங்கள் திறக்க அனுமதிக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
முதல் கட்டத்தின் கீழ், கோவிட்-19 இற்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்று இரண்டு வாரங்களை பூர்த்திதான மாணவர்கள் மட்டுமே விரிவுரைகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
முதல் கட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகளை மீண்டும் ஆரம்பிக்க பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் விரைவான பரவல் காரணமாக ஆகஸ்ட் முதல் அரச பல்கலைக்கழகங்கள் பூட்டப்பட்டன.
சம்பள முரண்பாடுகள் தொடர்பில் சில ஆசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. (யாழ் நியூஸ்)

