கொரோனா தொற்றுக்கு இலக்காகி 90-180 நாட்களுக்குப் பிறகு ஒன்பது முக்கிய நீண்ட நாள் கொரோனா அறிகுறிகளை வரையறுக்கும் புதிய ஆய்வின் விவரங்களை ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவின் இயக்குனர் டாக்டர் சந்திம ஜீவந்தர வெளிப்படுத்தியுள்ளார்.
"நீண்ட கோவிட் (Long Covid)" என்ற சொல் பொதுவாக கடுமையான கொரோனா தொற்றுக்கு பிறகு பின் தொடரும் அல்லது உருவாகும் அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளை விவரிக்கப் பயன்படுகிறது.
தற்போதைய அறிகுறிகளானது தற்போதைய தொற்று (4 முதல் 12 வாரங்கள் வரை) மற்றும் பிந்தைய கொரோனா தொற்று (≥12 வாரங்கள்) இரண்டையும் உள்ளடக்கியது என்று டாக்டர் ஜீவாந்திர மேலும் குறிப்பிட்டார்.
"நீண்ட-கோவிட் அறிகுறிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி இருந்தன, மேலும் அவை பெண்களில் சற்று அதிகமாகவே இருந்தன" என்று தெரிவித்தார்.
புதிய ஆய்வு ஒன்பது முக்கிய நீண்ட-கோவிட் அறிகுறிகளை வரையறுத்துள்ளது. இது தொற்று கண்டறியப்பட்ட 90-180 நாட்களுக்குப் பிறகு நிகழ்கிறது.

- அசாதாரண சுவாசம் - 8%
- வயிற்று அறிகுறிகள் - 8%
- கவலை/மன அழுத்தம் - 15%
- மார்பு/தொண்டை வலி - 6%
- அறிவாற்றல் பிரச்சினைகள் - 4%
- சோர்வு - 6%
- தலைவலி - 5%
- மயால்ஜியா (தசை வலி) - 1.5%
- மற்றைய வலி - 7%
(யாழ் நியூஸ்)