கொரோனா ஆண்டிபொடியான, அஸ்ட்றாஸெனிகா தொடர்பிலான சோதனைகளில் இருந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்படாதவர்களில் இறப்பை குறைப்பது அல்லது தீவிர நிலைமையில் இருந்து வெற்றியளிப்பதாக பிரித்தானிய மருந்து தயாரிப்பாளர் திங்களன்று தெரிவித்துள்ளார்.
AZD7442 எனப்படும் மருந்தானது, ஏழு நாட்கள் அல்லது அதற்கும் குறைவான தினங்களில் அறிகுறிகளை உடைய நோயாளிகளில் தீவிர கொரோனா பாதிப்பு அல்லது இறப்பு அபாயத்தை 50% குறைத்து, சோதனையின் முக்கிய இலக்கை அடைந்தது.
"எங்கள் ஆண்டிபொடியானது கடுமையான கொரோனா தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு தருவதோடு, ஆறு மாத காலத்திற்கு தொடர்ந்து செயல்படவல்லது என அதன் நிர்வாக துணைத் தலைவர் மெனெ பங்கலோஸ் தெரிவித்தார்.
நிறுவனம் தரவுகளை சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளது.
கொரோனா தடுப்பூசிகளுக்கு போதுமான வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத மக்களை பாதுகாக்கும் வகையில் அஸ்ட்றாஸெனிகா மருந்து ஒன்றை உருவாக்கியும் வருகிறது. இதனையொரு தடுப்பு மருந்தாக பயன்படுத்த அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து அவசர ஒப்புதலை கடந்த வாரம் கோரியுமுள்ளது. (யாழ் நியூஸ்)
- ராய்டர்ஸ்