இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் அதிகரிக்க அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், லாஃப்ஸ் நிறுவனம் அதன் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோ எடைக்கொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 984 ரூபாவினாலும், 5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 393 ரூபாவினாலும் இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 2,840 ரூபாவாகவும், 5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 1,136 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)